Wednesday, 10 September 2025

  நீர்வழிப் படூஉம்

   இந்த நாவலை இயற்றியவர் தேவிபாரதி.இவரின் இயற்பெயர் ராஜசேகரன்.இந்நாவல் 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது. 

          தமிழ்நாட்டில் உள்ள  கொங்கு பகுதியின் நாவித சமூகத்தினரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது இந்நாவல். 
           நீர்வழிப் படூஉம் (படகு போல் நீரின் பாதையில் செல்லும்) வாழ்க்கைப் பயணமும் விதிவசத்தால் நீரோட்டத்தில்  மிதப்பது போல நகரும் என்பதை சுட்டுகிறது.
ஒரு மனிதனின் மரணத்தைப்பற்றியும், ஒரு மனிதனுடைய பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே எந்த விதமான மனிதர்களை சம்பாரித்து வைத்திருக்க வேண்டும், அவனுடைய இறப்பிற்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்ற முக்கியத்துவத்தை இந்த நாவல் உணர்த்துகிறது. 
          

No comments:

Post a Comment