Thursday, 5 December 2024
Thursday, 21 November 2024
செயற்கை நுண்ணறிவு
மனிதனுக்கு இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு படைப்பாக்க திறன் ஆகும். இந்த படைப்பாக்க திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவியலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது. பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவைப்படுகிறது.இச் செயற்கை நுண்ணறிவு திட்டமிடல் சிந்தித்தல் எண்ணங்களை கற்றுக் கொள்ளுதல் மனித பேச்சைப் புரிந்துகொள்வது என பல்வேறு நுண்ணறிவு திறங்களை உள்ளடக்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு 1956 ஆம் ஆண்டில் ஒரு கல்வித் துறையாக டார்த்மவுத்து பணிப்பட்டறையில் நிறுவப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆழமான கற்றல் முந்தைய அனைத்து செயற்கை அறிதிறன் நுட்பங்களையும் மிஞ்சியபோது, நிதி வளத்தோடு ஆர்வமும் குவிந்தது.
செயற்கை நுண்ணறிவு பகுத்தறிவு, அறிவு உருவாக்கப்படுத்தல், திட்டமிடல், கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம், புலக்காட்சி தானியங்கி ஆகியவை அடங்கும்.
இயற்கை மொழி செயலாக்கம் நிரல்களை ஆங்கிலம் போன்ற மனித மொழிகளில் எழுதவும் தொடர்பு கொள்ளவும் வழிவகுக்கிறது. இதன் குறிப்பிட்ட சிக்கல்களில் பேச்சு உணர்தல், பேச்சு உருவாக்கம், எந்திர மொழிபெயர்ப்பு, தகவல் பிரித்தெடுத்தல், தகவல் மீட்டெடுத்தல், கேள்விக்குப் பதில்சொல்லுதல் ஆகியவை அடங்கும்.
நோம்சோம்சுகியின் ஆக்கமுறை இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்ட தொடக்க கால படைப்புகளில், நுண்ணுலகங்கள் (பொதுப்புலன் அறிவின் அகல்விரிவுச் சிக்கல் காரணமாக) எனப்படும் சிறிய களங்களுக்கு கட்டுப்படுத்தப்படாத, சொற்பொருள் குழப்பச் சிக்கல் இருந்தது.[1]
இயற்கை மொழிச் செயலாக்கத்துக்கான புதுப்புதுப் புள்ளியியல், ஆழ்கற்றல் நுட்பங்களில் சொல் பொருட்பொதிவு(பொருள்குறிப்பு) அடங்கும் (எப்படியும் பெரும்பாலும் ஒரு சொல் மற்றொரு பொருள்மாற்றிகளுக்கு நெருக்கமாகத் தோன்றும். இதற்கு உரைபொருள் நவில்பொருள் வடிவங்களைக் கண்டறிதல் வேண்டும்.[2] 2019 ஆம் ஆண்டில், உருவாக்கத்துக்கு முன் பயிற்சி பெற்ற பொருள்மாற்றி மொழிப் படிமங்கள் ஓரளவு ஒத்திசைவான பனுவலை உருவாக்கத் தொடங்கின; மேலும் 2023 ஆம் ஆண்டளவில் இந்தப் படிமங்கள் பார், சேட், ஜிஆர் இ, போன்ற பிற தேர்வுகளில் மாந்தநிலை மதிப்பெண்களைப் பெற முடிந்தது.
உணர்திறக் கணிப்பு என்பது மனித உணர்வு, உணர்ச்சி, மனநிலையை அறிந்து விளக்கி, செயல்படுத்தி உருவகப்படுத்தும் ஒரு இடைநிலை குடையாகும். எடுத்துக்காட்டாக, சில மெய்நிகர் எந்திரன்வகை உதவியாளர்கள் உரையாடலாக பேசவோ அல்லது நகைச்சுவையாக கேலி செய்யவோ திட்டமிடப்பட்டுள்ளனர். மாந்த ஊடாட்ட உணர்ச்சி இயங்கியலுக்கு உயர்ந்த உணர்திறன் கொண்டதாகத் தோன்றுகிறது அல்லது மாந்த, கணினி ஊடாட்டங்களை இயலுவதாக்குகிறது. இருப்பினும், இது அப்பாவி பயனர்களுக்குத் தற்போதுள்ள கணினி முகவர்கள் உண்மையில் எவ்வளவு அறிவாளிகள் என்பதைப் பற்றிய நம்பத்தகாத கருத்தை அளிக்க முனைகிறது. உணர்திறக் கணிப்பு சார்ந்த மிதமான வெற்றிகளில், பனுவல் உணர்ச்சிப் பகுப்பாய்வும் மிக அண்மையில் உருவாகிய பன்முறைமை உணர்ச்சிப் பகுப்பாய்வும் அடங்கும். இதில் செயற்கை அறிதிறன் காணொலி நாடா செய்திறக் கருப்பொருள்வழி காட்டப்படும் உணர்திறங்களை வகைப்படுத்துகிறது.
எளிமையான AI பயன்பாடுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை வகைப்படுத்திகளும் (எ. கா. " பளபளப்பாக இருந்தால் அது வைரம் "), கட்டுப்படுத்திகளும் ( "வைரமானால் எடுத்துகொள்") ஆகும். வகைபடுத்திகள் செயல்களாகும். இவை நெருக்கமான இணையைத் தெரிவுசெய்ய வடிவ இணக்கத்தைப் பயன்படுத்துகின்றன. இவற்றை. மேற்பார்வையிடப்பட்ட கற்றலைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் சரிசெய்ய முடியும். ஒவ்வொரு வடிவமும் (" அவதானிப்பு " என்றும் அழைக்கப்படுகிறது) முன்வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட வகைமையால் பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து வடிவங்களும் அவற்றின் வகைமைப் பெயர்களுடன் இணைந்து தரவு தொகுப்பு என்று அழைக்கப்படுகின்றன. ஒரு புதிய நோக்கீடு பெறப்படும்போது, அது முந்தைய பட்டறிவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும்.
செயற்கை நுன்ணறிவு, எந்திரக் கற்றல் தொழில்நுட்பம் 2020 இன் பெரும்பாலான இன்றியமையாத பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. எ.கா.: தேடுபொறிகள் (கூகிள் தேடல் போன்றது).
Thursday, 17 October 2024
பெண் எனும் ஆளுமை
மனித குலத்தின் வரலாறு பெண்களிடமிருந்தே தொடங்கியது என்பது தான் முற்றிலும் உண்மை. ஆதி மனித இனத்தின் தலைமையாகப் பெண்தான் இருந்து வழிநடத்தினாள். தனக்குரிய ஆணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையும் அவளிடமிருந்தது. காலங்கள் மாற மாற ‘விழித்துக்’ கொண்ட ஆண்களால் தான் அவளது தலைமைப் பொறுப்பு தட்டிப் பறிக்கப்பட்டது.
ஆளுமைத்திறன் என்பது ஒரு சிக்கலான பிரச்னையில் மனம் தடுமாறாது அதைத் தீர்க்க முயற்சிப்பதும், கைமீறிப் போய்விட்ட விஷயங்களைத் தடுமாறாமல் கையாளுவதும் தான். இந்த விஷயத்தில் ஆண்களை விடப் பெண்கள் தான் அதிகம் திறமை
வாய்ந்தவர்கள். இந்த ஆளுமைத்திறன் ஆண்களுக்கு பெரும் சவாலாக இருந்ததில் மெதுவாக பெண்களின் தலைமைப் பொறுப்பைக் கையகப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு நிர்வகிக்கும் திறன் இல்லை, ஆட்சி செய்யும் திறமை இல்லை என்றெல்லாம் தொடர்ந்து அவர்களின் மூளை வழியாக மரபணுக்களில் புகுத்திவிட்டார்கள். பெண்களும் இதை நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் பெரும் சோகம். படிப்புக்கும் ஆளுமைத்திறனுக்கும் சம்பந்தம் இல்லை. அது அவரவர் வளர்ந்த விதத்திலும், எதிர்கொண்ட பிரச்னைகளிலும் தான் மேம்படுகிறது. இந்த ஆளுமை உணர்வு தான் சாதாரண மனிதர்களிலிருந்து தலைவர்களைத் தனித்துக் காட்டுகிறது. மற்றவர்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல ஆளுமை. தன்னைத்தானே முதலில் கட்டுப்படுத்துபவர்களே மற்றவர்களையும் எளிதாகக் கட்டுப்படுத்துகின்றனர். அந்த வகையில் பெண்கள் தன் ஆசைகளையும் விருப்பங்களையும் ஒடுக்குவதில் வல்லவர்கள். ஆனால், ஆண்கள் எளிதில் சலனப்படும் இயல்புடையவர்கள். ஆண்கள் மாங்குமாங்கென்று வேலை செய்தாலும், பெண்தான் அவற்றை ஒழுங்குபடுத்தி நிர்வகித்தாள்.
ஆதியில் ஆண்கள்தான் வேட்டைக்குப் போய் உணவு கொண்டுவந்தார்கள் என்றும், பெண்கள் வீட்டில் இருந்து பயிரிட்டு விவசாயம் கண்டறிந்தார்கள் என்றும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்ததைச் சற்றே மாற்றிப் போட்டிருக்கிறது கடந்த வருடத்தின் கண்டுபிடிப்பு. 2020ஆம் வருடம் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலையில் ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முந்தைய ஒரு சடலம் கண்டறியப்பட்டது. சோதனைக்கு உட்படுத்தியதில் அது ஒரு பெண்ணின் உடல் என்றும், வேட்டை அவளது தொழில் என்றும் அறிய முடிந்தது. இதன் மூலம் ஆண்கள் மட்டுமே வெளியே சென்று வேட்டையாடினார்கள். பெண்கள் வீட்டோடு இருந்து உணவு சேகரித்தார்கள் என்ற கருத்து மாறியது. இந்த ஆய்வினை டாவீசில் (USA) உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்திருக்கின்றனர். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை, Female Hunters of the Early Americas என்ற தலைப்பில் Nov. 4 தேதியிட்ட in Science Advances ஆய்விதழில் வெளியாகியிருக்கிறது.
பெண் என்றாலே மெல்லியளாள் என்று பொதுப்பார்வை இருக்கிறது. ஆனால், ஆணைவிட வலுவானவள் என்ற விஷயத்தை யுகங்களாக மறைத்ததில் தான் ஆண்களின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது. மனதையும் எண்ணங்களையும் வலுவிழக்கச் செய்தாலே போதும். இயல்பாகவே உடலும் வலுவிழக்கும் என்ற உளவியல் ரீதியான தாக்குதலைத்தான் ஆண்கள் தொடுத்திருக்கிறார்கள்.
சங்ககாலப் பெண்கள் படிப்பறிவுடன் திகழ்ந்தார்கள். ஓளவையார், வெண்ணிக் குயத்தியார், வெள்ளிவீதியார், இளவெயினி, பாரிமகளிர், காக்கைப்பாடினி, நச்செள்ளை இன்னும் எத்தனையோ மகளிர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர். இலக்கியங்களில் சிறந்திருந்தனர். பெண்களின் பெருமை ஓங்கியிருந்தது. என்றாலும் பிற்காலத்தில் வந்த ஆண்கள், பெண்களை முடக்க முதலில் கையிலெடுத்தது அவர்களது கல்வி பயிலும் உரிமையைப் பறித்ததுதான்.
பழந்தமிழகத்தில்கூட அரசாட்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. சோழ இளவரசி குந்தவை, நூர்ஜஹான், ஜஹானாரா என்று நிறைய உதாரணங்கள் இருக்கின்றனர். இன்னும் எத்தனையோ குடும்பங்களில் பெண்தான் முடிவெடுப்பவளாகத் திகழ்கிறாள். அவள் தொலைநோக்குப் பார்வையுடன் தான் சிந்திக்கிறாள். பெண்ணைக் கலந்து எடுக்காத எந்த முடிவும் வெற்றி பெறுவதில்லை. ஆனால், இதை ஏற்றுக்கொள்ள ஆண்களுக்கு வறட்டு கௌரவம் தடுக்கிறது.
ஆணைக் கையாளும் பக்குவமும் பெண்ணுக்கு நிறைய உண்டு. தன்னைவிட ‘இளைய’ வயதுப் பெண்ணை ஓர் ஆண் மணமுடிக்க என்னென்னவோ காரணங்கள் சொல்லலாம். ஆனால், வயது அதிகமான ஆணைக் குறைந்த வயதுப் பெண் சுலபமாக ‘ஹேண்டில்’ செய்வாள் என்பதுதான் உண்மை.
பெண்ணின் ஆளுமைத்திறனுக்குச் சரியான எடுத்துக்காட்டாக அவளது ‘மல்ட்டி டாஸ்கிங்’ வேலைகளைச் செய்வதைச் சொல்லலாம். அவள் சமைத்துக் கொண்டே வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டு விட்டு, குழந்தைக்கு பால்புட்டியைக் கொடுத்து, வயதானவர்கள் இருந்தால் காபி போட்டுக் கொடுத்துவிட்டு, வரும் தொலைபேசி அழைப்பையும் கவனித்துக் கொள்ள முடியும். ஆனால், ஆணால் ஒரு நேரத்தில் ஒரு வேலைதான் செய்ய முடியும். சமையல்கூட நிறைய ஆண்கள் ஒவ்வொன்றாகத் தான் சமைப்பார்கள். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வகை சமைக்க முடியாமல் திணறுவார்கள். அவ்வளவு ஏன் பெண்ணால் வீட்டுவேலை, அலுவலக வேலை இரண்டையும் அசால்ட்டாகச் சமாளிக்க முடியும். ஆணால் நிச்சயமாக முடியாது.
இயற்கையாகவே ஆண்களின் மூளையைவிடப் பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக இருந்தாலும் அவர்களின் மூளைக்கு அதிக திறன் உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆளுமை என்பது மூளையின் அளவில் இல்லை, செயலில் தான் இருக்கிறது என்பது புரிகிறது. படித்தவர்களைவிடப் படிப்பறிவு இல்லாத, அனுபவ அறிவு மிகுந்த கிராமப்புற மகளிர் எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளையும் லகுவாகச் சமாளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலோர மீனவக் குடும்பங்களில் ஆண்கள் மீன்பிடித்து வருவதோடு அவர்களது வேலை முடிந்துவிடும். அந்த மீன்களைச் சுத்தப்படுத்தி, வியாபாரம் செய்து, மீதமான மீன்களைக் கருவாடாக்கி, காசு பார்ப்பது எல்லாம் பெண்கள் வேலைதான். சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் தான் அவற்றைச் சமாளித்துக் கடக்கிறார்கள்.
எனக்குத் தூரத்து உறவுப் பெண் ஒருவர் காதல் மணம் புரிந்தவர். ஒரு மகன் பிறந்த பிறகு கணவருக்கு நாள்பட்ட புற்றுநோய் என்று தெரியவந்தது. எவ்வளவோ மருத்துவச் செலவுகள் செய்தும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. கணவர் இறந்தபின் உறவினர்கள் வற்புறுத்தியும் மறுமணத்தைத் தவிர்த்து விட்டு, வேலைக்குச் செல்லத் தொடங்கினார். வயதான தாயார், திருமணத்திற்குக் காத்திருந்த இரண்டு தங்கைகளைக் கவனித்துக் கொண்டு, வீடு ஒன்றையும் சிறியதாகக் கட்டி, மகனையும் நன்கு படிக்க வைத்தார். தங்கைகளுக்குத் திருமணத்தையும் முடித்து வைத்தார். இப்போது மகன் வேலைக்குச் செல்கிறார். இருந்தும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். கணவர் இறந்ததும் சோகம் கொண்டாடிக் கொண்டு மூலையில் முடங்கிவிடாமல் இயங்கத் தூண்டிய அவரது ஆளுமைதான் அந்தக் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
கணவன் இறந்த பின்னும் வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் பெண்கள் ஏராளமாக இருக்கின்றனர். ஆனால், மனைவி இறந்தபின் மனதளவில் முடங்கிவிடும் ஆண்கள் மீதி வாழ்வை அச்சத்துடன்தான் எதிர்கொள்கின்றனர். அல்லது இன்னொரு பெண்ணை மணம்புரிந்து தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்கின்றனர் என்பது மறுக்கவியலா நிதர்சனம். இத்தகைய ஆளுமை மிக்கப் பெண்களை மட்டம் தட்டி வைத்திருக்கும் ஆண்கள் இனியாவது தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களின் ஆளுமைத் திறனைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
Tuesday, 24 September 2024
கல்லூரிகளுக்கிடையேயான பேச்சுப் போட்டி
சென்னை மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் 21.09.2024 அன்று மன்னிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிவாரியாக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிகள் வணிக மேலாண்மைத் துறை H.ஆன்சல் சர்மா இந்தி மொழி பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000/-, ஆங்கிலத் துறை B..தான்யா ஆங்கில மொழியில் இரண்டாம் பரிசு ரூ.5000/- , அ.பிரீத்தி உயிர் வேதியியல் துறை மாணவி தமிழில் ஆறுதல் பரிசு ரூ.500/- பெற்றுள்ளனர்.
Friday, 23 August 2024
jpUg;gj;J}h; J}aneQ;rf; fy;Y}upapy; Ngr;Rg;Nghl;b
je;ij ngupahh; mth;fspd; 146 - tJ gpwe;j ehs; tpohit Kd;dpl;L jpUg;gj;J}h; khtl;lk; gFj;jwpthsh; fofk; rhu;ghf jpUg;gj;J}h; khtl;l mstpy; fy;Y}up khztu;fSf;fhd Ngr;Rg;Nghl;b 28.08.2024 Gjd; fpoik md;W jpUg;gj;J}h; J}aneQ;rf; fy;Y}upapy; eilngw;wJ. ,g;Nghl;bapy; caph; Ntjpapay; Jiw ,sq;fiy Kjyhkhz;L khztp m.gpupj;jp> tzpf Nkyhz;ikapay; Jiw ,sq;fiy %d;whkhz;L khztp r.it\;ztp> fzpdp mwptpay; Jiw KJfiy ,uz;lhkhz;L khztp r.gthdp kw;Wk; ,aw;gpay; Jiw KJfiy ,uz;lhkhz;L khztp j.gy;ytp MfpNahh; fye;Jnfhz;L gq;Nfw;Gr; rhd;wpjio ngw;Ws;sdh;.
Wednesday, 10 July 2024
சங்க காலம்
5 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை
தொல்பொருள் சான்றுகளின் படி சங்க காலம் ஏறத்தாழ பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 3 ஆம் நூற்றாண்டு வரை எட்டு நூற்றாண்டுகள் நீடித்தது. இக்காலத்தில் இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள் இக்கால வரலாற்றின் முக்கிய ஆதாரமாக உள்ளன. பண்டைய தமிழகம் முடியாட்சி அரசுகாளாகிய, சேரர், சோழர் மற்றும் பாண்டியர் எனும் மூவேந்தரால் ஆளப்பட்டது. சேரர்கள் தமிழ்கத்தின் மேற்குப் பகுதியையும், பாண்டியர்கள் தெற்கு பகுதியையும், சோழர்கள் காவேரி வடிநிலப் பகுதியையும் ஆண்டனர். இம்மன்னர்கள் வேந்தர் என்று அழைக்கப்பட்டனர். வேள் அல்லது வேளிர் என்று அழைக்கப்பட்ட பழங்குடித் தலைவர்கள் குறுநில மன்னர்களாக ஆண்டுவந்தனர். உள்ளூர் அளவில் கிழார் அல்லது மன்னர் என்று அழைக்கப்படும் குலத்தலைவர்கள் இருந்தனர். சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். இவர்கள், போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.தமிழகதத்தில் தனியரசுகளாக விளங்கின இந்த இராச்சியங்களைத் தவிர்த்து வெளி சக்திகளால் இந்தக் கால கட்டத்தில் கைப்பற்றப்படவில்லை. வடக்கே உள்ள அரசுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்புகள் இருந்தன. இவை அசோகரின் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த இராச்சியங்கள் உரோமானியர் மற்றும் ஆன் சீனர் உட்பட பல இராச்சியங்களுடன் குறிப்பிடத்தக்க வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தன. வணிகத்தின் பெரும்பகுதி முசிறி மற்றும் கொற்கை உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக நடத்தப்பட்டது. அழகன்குளம் தொல்லியல் தளத்தில் அண்மைய அகழ்வாய்வுகள் சங்க காலத்தின் முக்கியமான வர்த்தக மையங்கள் அல்லது துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது தெரியவருகிறது. முத்து, பட்டு, வாசனைப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவை பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டன.
இக்காலத்தில் பல நூல்கள் இயற்றப்பட்டன, அதில் எஞ்சியிருக்கும் பழமையான நூல், தமிழ் இலக்கண குறிப்பான தொல்காப்பியம் ஆகும். பெரும்பாலான சங்க இலக்கியங்கள் காதல் மற்றும் போரை கருப்பொருளாகக் கொண்டுள்ளன. இச்செய்யுள்களின் வழியாக அன்றைய தமிழ்ச் சமூகத்தை அறிய முடிகிறது. நிலம் வளமானதாக இருந்தது, மேலும் மக்கள் எந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு தொழில்களைத் தொடர்ந்தனர். அவர்களின் கடவுள்களில் சேயோன் மற்றும் கொற்றவை போன்றவர்கள் அடங்குவர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் வணங்கப்பட்டனர். ஆட்சியாளர்கள் பௌத்தம் மற்றும் சமண சமயத்தையும் ஆதரித்தனர், மேலும் பொது ஊழிக்குப் பிறகான காலத்தில் தொடங்கி வேத வழக்கங்கள் பற்றிய குறிப்புகள் வளரத் தொடங்கின.
இடைக்காலம் (பொ.ஊ. 3 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை)
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், களப்பிரர்கள் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்டனர். இவர்கள் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு காலத்தில் பண்டைய தமிழ் இராச்சியங்களில் நிலப்பிரபுக்களாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. களப்பிரர் ஆட்சி தமிழ் வரலாற்றின் "இருண்ட காலம்" என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக இந்த காலத்தை பற்றிய தகவல்கள் கூறும் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் இல்லாததாலும், இக்காலத்தை பற்றிய குறிப்புகள் பல நூற்றாண்டிற்கு பிறகு வெளிவந்த ஆதாரங்களைப் பின்பற்றியிருப்பதனால், இக்காலத்தை பற்றிய சரியான முடிவுகள் எடுப்பது கடினமாக உள்ளது. இரட்டை தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை இக்காலத்தில் எழுதப்பட்டது. திருவள்ளுவரின் உன்னதமான தமிழ்த் தொகுப்பான திருக்குறள் இக்காலத்திற்கு தேதியிடப்பட்டுள்ளது.
பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில், களப்பிரர்கள் பாண்டியர்கள் மற்றும் சோழர்களால் தோற்கடிக்கபப்ட்டனர். முன்னர் பௌத்தம் மற்றும் சமணத்தை ஆதரித்த அவர்கள் பக்தி இயக்கத்தின் போது சைவம் மற்றும் வைணவத்திற்கு மாறினர். இக்காலம் பல்லவர்களின் எழுச்சியைக் கண்டது. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்மன், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சில பகுதிகளை ஆட்சி செய்தார். பல்லவர்கள் கோயில்களின் நுழைவாயிலில் கட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான கோபுரங்கள் மற்றும் கற்கோயில்களின் கட்டிடக்கலைக்காக அறியப்படுகின்றனர். மகாபலிபுரத்தில் பல கற்கோயில்கள் மற்றும் சிற்பங்களையும், காஞ்சிபுரத்தில் கோயில்களையும் எழுப்பினார்கள். பல்லவர்கள் தங்கள் ஆட்சிகாலம் முழுவதிலும் சோழர்கள் மற்றும் பாண்டியர்களுடன் தொடர்ந்து மோதலில் இருந்து வந்தனர். கிபி 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடுங்கோனால் பாண்டியர்கள் புத்துயிர் பெற்றனர். உறையூரில் சோழர்கள் மறைந்திருந்த நிலையில், தமிழகம் பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் பிரிக்கப்பட்டது. பல்லவர்கள் இறுதியாக 9 ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டனர்.
சோழர் ஆட்சி மீண்டும் ஒன்பதாம் நூற்றாண்டில் விசயாலய சோழன் கீழ் நிறுவப்பட்டது. தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு பெரும் ஆதிக்கம் செலுத்தும் அரசை நிறுவினார். 11 ஆம் நூற்றாண்டில், முதலாம் இராசராசன் தென்னிந்தியாவையும், இன்றைய இலங்கை, மாலத்தீவுகளின் சில பகுதிகளையும் கைப்பற்றி, இந்தியப் பெருங்கடல் முழுவதும் சோழர்களின் செல்வாக்கை அதிகரித்தார்.[50][51] இந்த காலத்தில் நாட்டை தனி நிர்வாக அலகுகளாக மறுசீரமைப்பது உட்பட பல நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திர சோழனின் கீழ், சோழப் பேரரசு அதன் உச்சத்தை அடைந்தது. வடக்கே வங்காளம் வரையிலும், இந்தியப் பெருங்கடலிலும் பரவி விரிந்தது. சோழர்கள் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் பல கோயில்களைக் கட்டினார்கள், அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது இராசராசனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெருவுடையார் கோயில் மற்றும் ராசேந்திரனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம்.
13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கீழ் பாண்டியர்கள் மீண்டும் ஆட்சி செய்தனர். இவர்கள் தங்கள் தலைநகரான மதுரையிலிருந்து பிற கடல்சார் பேரரசுகளுடன் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தினர். மார்கோ போலோ பாண்டியர்களை உலகின் பணக்கார பேரரசு என்று குறிப்பிட்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பட பல கோயில்களையும் பாண்டியர்கள் கட்டியுள்ளனர்.