Thursday, 15 November 2018


தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.
பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.
மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு பின்வருமாறு.

  • பழங்காலம்
    • சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
    • நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
  • இடைக்காலம்
    • பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
    • காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
    • உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
    • புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
    • புராணங்கள், தலபுராணங்கள்
    • இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
  • இக்காலம்
    • பத்தொன்பதாம் நூற்றாண்டு
      • கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
      • புதினம்
    • இருபதாம் நூற்றாண்டு
      • கட்டுரை
      • சிறுகதை
      • புதுக்கவிதை
      • ஆராய்ச்சிக் கட்டுரை

இந்த இணைய தளம் தமிழ் இலக்கியங்களை அனைவரும் எளிதாக கண்டறிய, புரிந்துகொள்ள உதவும் நோக்கோடு அமைக்கப்பட்டிருகிறது. உங்கள் கட்டுரைகள், கவிதை தொகுப்புகள் , ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை இந்த இணைய தளத்தில் நீங்கள் வெளியிடலாம்.

Here is an entry from Ethnologue about Tamil.

எழுத்திலக்கணம்

(Eluthu Ilakkanam)

எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு போன்ற பன்னிரண்டு பகுதிகளையும் எடுத்துரைப்பது எழுத்து இலக்கணம் ஆகும். எழுத்து - மொழிக்கு ஒலிவடிவம், வரிவடிவம் ஆகிய இரண்டையும் கொடுக்கிறது. ஒலி வடிவம் என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியைக் குறிக்கின்றது. வரி வடிவம் என்பது எழுத்தின் வடிவத்தைக் குறிக்கின்றது. எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,
  1. 1. முதல் எழுத்து
  2. 2. சார்பு எழுத்து

எழுத்து இலக்கணம் வகைகள்

(Eluthu Ilakkanam Vagaigal)