Tuesday, 30 October 2018

பாடல் : 001
அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.

*****
எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்... அந்த பேரின்பைதை தந்திடுவாய்.

பாடல் : 002
ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.
குணங்குடி மஸ்தான் சாகிபு

*****
ஆதியானவனே... ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே..
அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்க்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே

பாடல் : 003

வேத மறைப்பொருளை வேதாந்தத் துஉட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே
*****
வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள்
யாருள்ளார் பராபரமே

பாடல் : 004
அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே
*****
அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும்
மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே

பாடல் : 005
நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

****

நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே,
நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

Monday, 8 October 2018

வரலாறு

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.
  • பழங்காலம்
  • இடைக்காலம்
  • இக்காலம்
  • பத்தொன்பதாம் நூற்றாண்டு
  • இருபதாம் நூற்றாண்டு
  • இருபத்தோராம் நூற்றாண்டு

தற்கால இலக்கியம்

18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும், ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்; பின்னர் அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன:
  • சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
  • உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)
  • புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)
  • மணிப்பிரவாள நடை ஒழிந்தது. (20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)
அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர்,ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.