Tuesday, 24 September 2024

கல்லூரிகளுக்கிடையேயான  பேச்சுப்  போட்டி 

சென்னை மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் 21.09.2024 அன்று மன்னிப்பு  தினத்தை முன்னிட்டு கல்லூரிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது.  பல்வேறு தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிவாரியாக நடைபெற்ற பேச்சுப்  போட்டியில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு  மாணவிகள் வணிக‌ மேலாண்மைத் துறை H.ஆன்சல் சர்மா இந்தி மொழி பேச்சுப்  போட்டியில் முதல் பரிசு ரூ.10,000/-, ஆங்கிலத் துறை B..தான்யா ஆங்கில மொழியில்  இரண்டாம் பரிசு ரூ.5000/- , அ.பிரீத்தி உயிர் வேதியியல் துறை மாணவி‌ தமிழில் ஆறுதல் பரிசு ரூ.500/- பெற்றுள்ளனர்.