பெரியாரியல்
பெரியாரியல் என்பது பெரியாரின் பேச்சு, எழுத்து, செயற்பாடு ஆகிவற்றின் அடிப்படையில் அமைந்த கருத்தாக்கங்கள் ஆகும். பெரியார் 20 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி என பின்னர் வந்த அனேக தலைவர்கள் அவரின் சிந்தனையின் பல கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள்.
பெரியார் தமிழ்ச் சமூகத்தில் புரட்சிகர மாற்றங்களைச் செயற்படுத்தியவர். சாதிய கட்டமைப்பு, மூடநம்பிக்கைகள், ஆண் ஆதிக்கம், படிப்பறிவின்மை, ஏழ்மை மிகுந்து இருந்த காலத்தில் அவரது சிந்தனைகள் தமிழ்ச் சமூகத்தை முன்னேற்ற வழியில் செலுத்தின. அவரது சிந்தனைகளில் பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமத்துவம், சமூக முன்னேற்றம், இறைமறுப்பு ஆகிய கொள்கைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.
19-ஆம் நூற்றாண்டு பரந்த சமூக எழுச்சியைக் கண்ட ஒரு காலப்பகுதி ஆகும். ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய கண்டங்களின் பெரும்பாலான நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. முதல் தொழிற்புரட்சி, 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கினாலும், இந்த நூற்றாண்டில் முதல் முறை யாக அதன் பிரித்தானியத் தாயகத்திற்கு அப்பால் விரிவடைந்தது, குறிப்பாக ஐரோப்பாவின் கீழை நாடுகள், இரைன்லாந்து, வடக்கு இத்தாலி மற்றும் வடகிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களை மறுசீரமைத்தது. சில தசாப்தங்களுக்குப் பிறகு, இரண்டாவது தொழிற்புரட்சி மேலும் பெரிய நகரமயமாக்கலுக்கு வழிவகுத்தது, உற்பத்தித்திறன், பெறுகி, செழிப்பு ஆகியவை உயர் மட்டங்களுக்கு வளர்ந்தது, இது 20-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. திராவிடக் கழகத்தின் போர்வாள் என்று சொல்லத்தக்க அளவு செயல்வீரராக கருதப்பட்டவர் குத்தூசி குருசாமி அவர்கள். இவரும், தமது எழுத்துகளில் வள்ளலாரின் கருத்துகளை மேற்காட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியாகச் சுத்த சன்மார்க்கம் விளங்கியுள்ளது. வள்ளலார் காட்டியுள்ள சன்மார்க்கத்தின் நீட்சியே சுயமரியாதை இயக்கம் எனில் அதில் மிகையில்லை. இக்கருத்தை வள்ளலாரின் அருட்பாவிலும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையிலும் தோய்ந்த சாமி.சிதம்பரனார் போன்றவர்கள் நூல்களின் வாயிலாக நிறுவிச் சென்றுள்ளார்.
வள்ளலாரும், தந்தை பெரியாரும் காட்டும் மதம், சமயம், தவிர்த்த மனிதநேயம் இன்றைய மிக அவசியமான ஒன்றாகும். நாட்டில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள், வன்முறைகள், தீவைப்பு சம்பவங்கள் இவைகள் மதங்களைக் காக்க மனிதர்கள் செய்யும் வெறிச்செயல்கள். மதங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டன என்பதை மறந்து மனிதர் செய்யும் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் அழிய வேண்டுமானால் வள்ளலாரின் கொள்கையும், பெரியாரின் கொள்கையும் நாட்டில் வேர்விட்டு வளர வேண்டும். மனித சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாக வன்முறையால் அழிந்த பின்பு இங்கு எந்த மதமும் கடவுளும் வாழப்போகிறது என்று புரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் மானுட சமுதாயம் ஒன்றுபட்டு அன்பைப் பகிர்ந்து கொண்டு வாழவேண்டும். வள்ளலாரின் சுத்தசன்மார்க்க அன்பர்கள் இன்று உலகெங்கும் வாழ்ந்து வருகின்றனர். அசைவ உணவுப்பழக்கம் அதிகம் கொண்ட அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் கூட கணிசமான அளவு வள்ளலார் பக்தர்கள் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். குண்டுகளின் கோரத்தாண்டவத்தில் நாளும் தவிக்கும் இலங்கையிலும் சன்மார்க்க அன்பர்கள் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இன்றைய அரசியல்வாதிகளும், ஆன்மிகவாதிகளும் தங்கள் மேற்கோளுக்கு வள்ளலாரின் அருட்பாவைச் சொல்லி வருகின்றனர். சுத்தசன்மார்க்கம் வளர்ந்து வரும் காலகட்டம் இது. இது ஒன்றே அகில உலக சகோதரத்துவத்தையும், ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் மார்க்கம் ஆகும். பெரியாரின் ஆசைகள் வள்ளலாரின் வழியாக அவருக்கு முன்னரே அருட்பாவின் வாயிலாக வெளிப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட பெரியாரின் பொன்மொழிகளில் பல வள்ளலாரின் வழியில் ஒலிப்பதை உணருங்கள். “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” “பகுத்தறிவு நெறியே பண்பட்ட நெறி” “விதியை நம்பி மதியை இழக்காதே” “கல்வியும் அறிவும் பெறுவது மனிதம் மற்றவர்க்குத் தொல்லை கொடுக்காமல் மனிதத் தன்மையோடு வாழவே” “மாணவர்களை ஆசிரியர்கள் மதவாதிகளாக ஆக்கக் கூடாது” “பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்”