Saturday, 31 December 2022

            

     வாணியம்பாடி இசுலாமிய ஆண்கள்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் சிறுதானியங்களின் வரலாறு எனும் தலைப்பில் 27.12.2022-28.12.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நூல் வெளீட்டு விழாவில் தமிழ்த்துறை பேராசிரியர்கள் பல்வேறு  தலைப்புகளில் படைப்புகளை வழங்கியதற்கு புத்தகமும் சான்றிதழும் பரிசாக பெற்றுள்ளனர்




Wednesday, 9 November 2022

மனித உரிமை 
      மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"மனித உரிமைகள் என்றால் என்ன?கருதப்படுகின்றன.

       இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பவற்றுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமைசுதந்திரம்கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்சட்டத்தின் முன் சமநிலைநகர்வுச் சுதந்திரம்பண்பாட்டு உரிமைஉணவுக்கான உரிமைகல்வி உரிமை என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில் கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.

       வாழ்வுரிமை அல்லது வாழ்வதற்கான உரிமை என்பது எல்லா மனிதருக்கும் உரித்தான ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். குறிப்பாக பிற மனிதர்களால் கொல்லப்படாமல் இருப்பது வாழும் உரிமை ஆகும். வாழும் உரிமையே இனப்படுகொலைசட்டத்துக்குப்புறம்பான படுகொலைகள்தன்னிச்சையான படுகொலைகளை குற்றச்செயல்களாக ஆக்குகிறது. இந்த உரிமை கருக்கலைப்புகருணைக் கொலைமரண தண்டனைதற்காப்புப் போர் ஆகிய விவாதங்களில் முதன்மை பெறுகிறது. வாழும் உரிமை மிக முக்கியமானதாக இருந்தாலும் எல்லா நாடுகளும் சட்டங்களுக்கும் முறைமைகளுக்கும் கட்டுப்பட்டு அரசுகள் மனிதர்களைக் கொல்ல முடியும்.
 மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன.

   உணவுக்கான உரிமை என்பது மக்கள் உணவை உற்பத்திசெய்து, அல்லது கொள்வனவுசெய்து மானத்துடன் உண்பதற்கான உரிமை ஆகும். இது அனைத்துலகச் சட்டங்களில் உறுதிசெய்யப்பட்ட ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். இந்த உரிமையின் நீட்சியாக மக்கள் தம்மால் உச்சகட்டமாக முடிந்தளவு போதிய சத்தான உணவை உற்பத்தி செய்ய அல்லது கொளவனவுசெய்யத்தக்க சூழலை ஏதுவாக்குவது அரசுகளின் கடமை ஆகும்.[1] சிறப்பாக, இந்த உரிமை மக்கள் போரால் அல்லது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அரசுகள் உணவு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.

     நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக செருமனியில் வெளியிடப்பட்ட "கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம் என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.

 


Monday, 24 October 2022

தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம்  

 

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் 17.10.2022 அன்று  நடைபெற்ற அகார்ட் தொலைக்காட்சி தீபாவளி சிறப்புப் பட்டிமன்றத்தில் தமிழ்த்துறை மாணவிகள்  பங்கேற்று  சிறப்பித்தனர்.










Wednesday, 21 September 2022

திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பாக தமிழறிஞர் கா. . . இரகுநாயகன் அவர்களின் நூற்றாண்டு விழா கல்லூரி அளவிலான பல்வேறு போட்டிகள்- 20.09.2022,  

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில்

 மாணவிகள் பற்கேற்பு  

கல்வி வளர்ச்சித்துறை சார்பாக ஆண்டுதோறும் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிளான பேச்சுப்போட்டி நடைபெற்று
வருவதை பாராட்டி  15.09.2022  அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைப்பெற்ற போட்டியில்    மாணவிகள் பங்கேற்று  முதல் பரிசு ரூபாய் . 3000/-   பெற்று உள்ளனர்.












Tuesday, 23 August 2022

 

ருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி, வாணியம்பாடி

           kfhftp ghujpahhpd; epidT ehis முன்னிட்டு fy;Y}hp                  khzth;fSf;fhd khepy mstpyhd ftpijg; Nghl;b - 18.08.2022

மாணவிகள் பற்கேற்பு







Wednesday, 27 July 2022

                                                       பேச்சுப்போட்டி- 24.07.2022 







Thursday, 16 June 2022

தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள்


காதல்

தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும். இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள். அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.

வீரம்

பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.

நட்பு

சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.
முகம்ந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு'
” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
” என்று கூறுவதிலிருந்து விருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.

இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.

Wednesday, 4 May 2022

 

தமிழர் நாட்டுப்புறவியல்


                                                           நாட்டுப்புறவியல் - வரலாறு 


                                  நாட்டுப்புற இலக்கியத்தை, எழுத்து இலக்கிய வடிவத்தின் முதல்நிலை என்றும், அடித்தள நிலை என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்தகு நிலையில் நாட்டுப்புற இலக்கியம் என்பது அழகிய ஒரு நுண்கலை (Fine Art) என்று குறிப்பிட வேண்டும். பொதுவாகக் கலையின் சுவையினைக் கண்ணால் கண்டும், காதால் கேட்டும் அனுபவிக்க இயலும். ஆனால் இலக்கியத்தின் சுவையினைக் கருத்தால் மட்டுமே உணர முடியும். எனவே இலக்கியத்தின் வரலாற்றை அறிய வேண்டும் என்று எண்ணும் போது, அந்த இலக்கியத்தின் படைப்பாளனோடும் அந்த நூலோடும் சேர்த்தே சிந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வரலாற்று ஆய்வில் படைப்பாளனையும் (Author) படைப்பையும் (Text) ஒருசேர இணைத்தே பார்க்க வேண்டியுள்ளது.“தலைமை வாய்ந்த இலக்கிய வரலாறுகள் பலவும் நாகரிகப் பண்பாட்டு வரலாறுகளாகவோ அல்லது திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதிகளாகவோ உள்ளன” 

உலகளாவிய நிலையில் நாட்டுப்புறவியல்

மானுடம் தொடங்கிய காலம் முதலே நாட்டுப்புற வழக்காறுகள் தோன்றிவிட்டன. மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்த படைப்புத்திறன் மிக்க வழக்காறுகள் இலக்கியமாகப் பரிணமித்தன. அவை, 
1) பொது மக்களைச் சார்ந்த மரபுமுறைகள் (Popular Antiquities) 
 2) பொது மக்கள் இலக்கியம் (Popular Literature)  
3) பொதுப் புராணவியல் (Common Mythology) 

வில்லியம் ஜான் தாமஸ் என்னும் ஆங்கிலேயர் கி.பி.1846ஆம் ஆண்டு நாட்டுப்புறவியலைக் குறிக்கும் ‘Folklore’ என்ற சொல்லை உருவாக்கி உலகுக்கு வழங்கினார். இச்சொல்லே பெருவாரியாக எல்லா நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு, மனிதனின் சடங்கு முறைகள், நம்பிக்கைகள், கதைப் பாடல்கள், பழமொழி, நாட்டுப்புறப் பாடல் என வழக்காறுகள் அனைத்துமே நாட்டுப்புறவியல் இலக்கியம் என்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், நாட்டுப்புறவியல் என்பது பழங்காலப் பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) என்பது அவர் கருத்தாகும். உலக நாடுகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரெஞ்சு, ஜெர்மன், கனடா, மெக்ஸிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் இவ்விலக்கியத்தின் பல்வேறு கூறுகளை, தத்தம் மண்ணின் மணம் வீசத் திறனாய்வு செய்து உலகளாவிய அளவில் நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்பினை உணரும்படி செய்தன
இந்திய அளவில் நாட்டுப்புறவியல்

மனித இனம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அந்த அளவு பழமை மிக்கது நாட்டுப்புறவியலாகும். இதில் இந்திய அளவில் எத்தகு நிலையில் நாட்டுப்புறவியல் விளங்கியது என்பதைக் காணும் போது, இந்தியாவில் நாட்டுப்புறவியல் துறை தனித்ததொரு துறையாக வளரவில்லை. ஆனால் இந்தியவியலின் (Indology) ஒரு பகுதியாகவே கருதப்பட்டது என்பது அறிஞர் கருத்தாகும். இந்திய நாட்டின் பாரம்பரியத்தைக் கூறும் வேதத்தில், குறிப்பாக ரிக் வேதத்தில் பழமையான நாட்டுப்புறப் பாடலும் கதைப்பாடலும் காணப்படுகின்றன. பஞ்சதந்திரக் கதை இந்திய நாட்டுப்புற இலக்கியத்தின் தலைமை இடத்தைப் பெற்றதாகும். புத்த ஜாதகக் கதைகள் நீதிநெறிக் கதைகளாகும்.இந்திய நாட்டின் காஷ்மீர்ப் பகுதி, இமாசலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம், பீகார், அசாம், ஒரிசா, மேகாலயா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளம் என்று அனைத்துப் பகுதிகளிலும் நாட்டுப்புறக் கதைகளும், நாட்டுப்புறப் பாடல்களும் காணப்பட்டன என்பதை இந்திய நாட்டுப்புறவியல் வரலாற்றினைப் படிக்கும் பொழுது அறிய முடிகிறது
தமிழக அளவில் நாட்டுப்புறவியல்

தமிழக நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறைகளை, நாகரிகத்தை உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் இலக்கியம் நாட்டுப்புறவியல் இலக்கியமாகும். இவற்றை நாட்டுப்புற மக்களின் மரபு வழிப்பட்ட படைப்புகள் (Traditional Creations) எனலாம் என்று அறிஞர் கூறுகின்றனர்.
வட வேங்கடம் தென்குமரி 
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் 

 என்பதால் வேங்கடம் முதல் குமரி வரை உள்ள தமிழ்மொழி பேசும் தமிழக மக்களின் வாழ்வியல் முறைகளை நாட்டுப்புற வழக்காறுகள் எடுத்துரைக்கின்றன.தமிழ் மக்களின் நாட்டுப் புற வாழ்வியல் கூறுகளை ஆயும் இயலே தமிழர் நாட்டுப்புறவியல் ஆகும். இலங்கையில் இத் துறை தமிழர் நாட்டாரியல் என்று பெரிதும் அறியப்படுகிறது. தமிழர் நாட்டுப்புற வழக்காற்றியல் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. தமிழரின் அன்றாட வாழ்வில் பெரும்பாலும் வாய்மொழியாக வழங்கி வந்த பாட்டுக்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், நம்பிக்கைகள் ஆகியவையும், பார்த்துச் செய்தல் மூலம் பகிரப்பட்ட ஆடல்கள், கூத்து, இசை, விளையாட்டுக்கள், வழக்கங்கள், கைத்தொழில்கள், நுட்பங்கள் மற்றும் கலைகள் ஆகியவையும் தமிழர் நாட்டுப்புறவியலில் அடங்கும்.

குறிப்பாக பெரும் மரபுகள் அல்லது கதையாடல்களைத் தாண்டி வாழும் கிராமத்து                  மக்கள், தலித் மக்கள், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை இத் துறை கவனமெடுத்து ஆய்கிறது. இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புறச் சேரிகளில் இருந்து தோன்றிய கானா பாடல்கள், ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு சுட்டலாம். பல சந்தர்ப்பங்களில் நாட்டுப்புறவியல் செவ்விலக்கியங்களோடும், பெரும் மரபுகளோடும் ஒப்பிட்டு வேறுபடுத்திக் காட்டுவர்.


Sunday, 24 April 2022


      ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகுண்ணத்தூர், ஆரணி முத்தமிழ் பெருவிழாவினை (2022) முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி முதலியனவற்றை 20.04.2022 அன்று நடத்தியது. இதில் நமது மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியைச் சார்ந்த இளங்கலை வணிக மேலாண்மையியல் துறை மூன்றாமாண்டு மாணவி செ.திவ்யதர்ஷினி பேச்சுப்போட்டியில் மூன்றாம் பரிசு ரூ.5000 பெற்றுள்ளார் என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.