சுற்றுலா வளர்ச்சி
சுற்றுலா (tourism) என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெற கூடாது".
சுற்றுலாத்துறை
உலகிலேயே மிகப்பெரிய துறையாக விளங்குவது சுற்றுலாத்துறை. 2010-இல், 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, 2009-ஐக் காட்டிலும் 6.6% வளர்ச்சியினை காட்டுகிறது. 2010-இல் உலக சுற்றுலாத்துறை 919 பில்லியன் அமெரிக்க டாலர் வரவை எட்டியுள்ளது. 2009-இல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமாக உலக சுற்றுலாத்துறை 2008-இன் இரண்டாம் பாதியிலிருந்து 2009-ஆம் ஆண்டின் இறுதிவரை சரிவைக் கண்டது. 2009-இல் உலகை உலுக்கிய பறவைக் காய்ச்சல் சர்வதேச சுற்றுபயணிகளின் வருகையை 2009-ஐக் காட்டிலும் 4.2% குறைத்தது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக விளங்குகிறது. சுற்றுலாத்துறை போக்குவரத்து உணவுத்துறை, இடவசதி, ஒய்வு மற்றும் கேளிக்கை மற்றும் சுற்றுலா சேவைகள் ஆகிய ஐந்து துறைகளைச் சார்ந்துள்ளது.
தமிழர் பயண வரலாறு
போக்குவரத்து, தொலைதொடர்பு, விருந்தோம்பல் துறைகள் பழங்காலத்தில் விரிபு பெற்று இருக்கவில்லை. இதனால் பெரும்பான்மையானோர் தாம் பிறந்த கிராமங்களிலேயே தமது வாழ்வை வாழ்ந்தனர். இருப்பினும் படைவீரர்கள், வணிகர்கள், சமய நோக்குடையோரும் பிற இடங்களுக்கு செல்ல வாய்ப்பு பெற்றனர். சோழ மன்னர்கள் இலங்கைக்கும் தெற்காசியாவுக்கும் படையெடுத்த போது பலர் அங்கு சென்றனர். குறிப்பிடத்தக்கோர் அங்கேயே இருந்துவிட்டனர். தமிழ் வணிகர்கள் பல இடங்களுக்கு பழங்காலம் முதலே சென்று வந்தனர் என்பது வரலாற்றுக் குறிப்புகளில் கிடைக்கிறது. சமய தலங்களை வணங்குவதற்கும், தமது சமயத்தைப் பரப்புவதற்கும் தமிழர் பல இடங்களுக்கு சென்று வந்தனர்.
வணிக விருந்தோம்பல் விரிபு பெற முன்னர் உணவுக்காவும், உறையுளுக்கும் சென்ற இடம் குடியாளர்களையே பயணர்கள் தங்கி இருந்தார்கள். வீடுகளில் திண்ணைகள் இருந்தன. வீடுகளுக்கு வரும் பயணிகளுக்கு உணவளித்து இடமளிப்பது பண்பாக இருந்தது. குறிப்பாக சமயப் பெரியார்களுக்கு உணவளிப்பது சிறந்த பேறாக கருதப்பட்டது.
செல்வந்தர்கள் மடங்களை கட்டி, அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிடமும் தந்துதவினர். இந்த மடங்கள் பல வற்றில் சாதி அமைப்பு பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா
மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் ஒரு சாரார்ரால் பார்க்கப்படுகிறது. வெளித் தொடர்பும் ஊடாடலும் உள்ளூர்காரர்களுக்கு வரவுகளாக பாக்கப்படுகின்றன. அதே வேளை சுற்றுலா பல கேடுகளையும் செல்வவுகளையும் கொண்டுள்ளது.
மேற்குநாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற்காக அவர்களுக்கு தேவையான உயர் வசதி படைத்த வலயங்களை மூன்றாம் உலக நாட்டு அதிகார வணிக வர்க்கத்தினர் பெரும் செலவில் கட்டுகின்றனர். இது அத்யாவசிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை புறம் தள்ளியும் கட்டப்படுகின்றன. இத்தகைய வலயங்கள் நாட்டுக்குள்ளே இருக்கும் ஏற்றதாழ்வை பெரிதாக்குகின்றன. சுற்றுலாத்துறையால் கிடைக்கும் வருவாயும் பொது மேம்பாட்டிற்கு செல்லாமல் அதிகார வட்டத்திற்கே போய்சேருவதாகவும் விமர்சகர்கள் சாடுகின்றனர்.
இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் சுற்றுலாவே அந்த வன்முறையை அரசுகளை நிலைத்து நிக்க உதவுகின்றன. எவ்வளவு இனப்பிரச்சினை வெடித்தாலும், இலங்கையின் கொழும்பு, கண்டி, காலி போன்ற இடங்களுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை தொடர்கிறது. பர்மாவின் சர்வதிகார அரசுக்கும் சுற்றுலா வருவாய் முக்கியமாக அமைக்கிறது.
இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பாலியல் சுரண்டலில் ஈடுபடவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார்கள். ஏழைச் சிறுவர்கள், பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை.
உலகச் சுற்றுலாப் புள்ளிவிபரங்கள்
உலக சுற்றுலா அமைப்பின் அறிக்கையின்படி 2012 ஆவது ஆண்டில் வருகைதந்த பயணிகளின் எண்ணிக்கைகேற்ப முதல் பத்து நாடுகளின் பட்டியல் கீழே தரப்படுகின்றது.
தரவரிசை | நாடு | உலக சுற்றுலாத்துறைப் பிரதேசம் | சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகைகள் (2012) | சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகைகள் (2011) | மாற்றம் (2011 முதல் 2012வரை) | மாற்றம் (2010 முதல் 2011வரை) |
---|---|---|---|---|---|---|
1 | ![]() | ஐரோப்பா | 83.0 மில்லியன் | 81.6 மில்லியன் | +1.8% | +5.0% |
2 | ![]() | வட அமெரிக்கா | 67.0 மில்லியன் | 62.7 மில்லியன் | +6.8% | +4.9% |
3 | ![]() | ஆசியா | 57.7 மில்லியன் | 57.6 மில்லியன் | +0.3% | +3.4% |
4 | ![]() | ஐரோப்பா | 57.7 மில்லியன் | 56.2 மில்லியன் | +2.7% | +6.6% |
5 | ![]() | ஐரோப்பா | 46.4 மில்லியன் | 46.1 மில்லியன் | +0.5% | +5.7% |
6 | ![]() | ஐரோப்பா | 35.7 மில்லியன் | 34.7 மில்லியன் | +3.0% | +10.5% |
7 | ![]() | ஐரோப்பா | 30.4 மில்லியன் | 28.4 மில்லியன் | +7.3% | +5.5% |
8 | ![]() | ஐரோப்பா | 29.3 மில்லியன் | 29.3 மில்லியன் | -0.1% | +3.6% |
9 | ![]() | ஐரோப்பா | 25.7 மில்லியன் | 22.7 மில்லியன் | +13.4% | +11.9% |
10 | ![]() | ஆசியா | 25.0 மில்லியன் | 24.7 மில்லியன் | +1.3% | +0.6% |
சர்வதேச சுற்றுலாத்துறைச் செலவீனங்கள்
உலக சுற்றுலா அமைப்பின் அறிக்கையின்படி 2012 ஆவது ஆண்டில் சர்வதேச சுற்றுலாத்துறைக்காக அதிக செலவீனத்தை மேற்கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல் கீழே தரப்படுகின்றது.
தரவரிசை 2012 | நாடு | உலக சுற்றுலாத்துறைப் பிரதேசம் | சர்வதேச சுற்றுலாத்துறைச் செலவீனம் 2011 | சர்வதேச சுற்றுலாத்துறைச் செலவீனம் 2012[4] | % மாற்றம் |
---|---|---|---|---|---|
1 | ![]() | ஆசியா | $72.3 பில்லியன் | $102.0 பில்லியன் | ![]() |
2 | ![]() | ஐரோப்பா | $85.9 பில்லியன் | $83.8 பில்லியன் | ![]() |
3 | ![]() | வட அமெரிக்கா | $78.7 பில்லியன் | $83.7 பில்லியன் | ![]() |
4 | ![]() | ஐரோப்பா | $51.0 பில்லியன் | $52.3 பில்லியன் | ![]() |
5 | ![]() | ஐரோப்பா | $32.5 பில்லியன் | $42.8 பில்லியன் | ![]() |
6 | ![]() | ஐரோப்பா | $44.1 பில்லியன் | $38.1 பில்லியன் | ![]() |
7 | ![]() | வட அமெரிக்கா | $33.3 பில்லியன் | $35.2 பில்லியன் | ![]() |
8 | ![]() | ஆசியா | $27.2 பில்லியன் | $28.1 பில்லியன் | ![]() |
9 | ![]() | ஓசானியா | $26.7 பில்லியன் | $27.6 பில்லியன் | ![]() |
10 | ![]() | ஐரோப்பா | $28.7 பில்லியன் | $26.2 பில்லியன் | ![]() |