Monday, 12 March 2018

மார்ச் மாத அறிக்கை

தமிழ்த்துறை
மார்ச் மாத அறிக்கை – 2017 -2018

யாமரியேன் பாராபரமே என்று நேற்று ஹரிஹரன் எழுதியது இந்த பராபரக் கண்ணி பற்றி எழுதத் தூண்டியது.

பராபரக் கண்ணி எழுதியவர் குணங்குடி மஸ்தான். மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டது. இரண்டு இரண்டடிகள் கொண்டது .

சமயங்களைக் கடந்த மதங்களைக் கடந்த பாடல்களைக் கொண்டது குணங்குடி மஸ்தான் பாடல்கள். தாயுமானவர் பாடல்கள் போல் பெரும் சிறப்புக்குறியன.

ஏறத்தாழ ஒத்தக் கருத்தினை கொண்டவை. சரவணப் பெருமாள் ஐயர், ஐயா சுவாமி முதலியார், வேங்கடராயப்பிள்ளைக் கவிராயர் சபாபதி முதலியார், மற்றும் செய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர் போன்றவர்களால் புகழ் மாலைப் பாடப்பெற்ற சிறப்பு திரு குணங்குடி மஸ்தான் பாடல்களுக்கு உண்டு.

முடிந்த வரை ஒரு பதிவிற்கு 5 பாடல்கள் வீதம் பதிக்க முயல்கிறேன். கற்றுணர்ந்த பெரியோர்களும், எல்லாம் வல்ல ஆண்டவனும் துணை புரிவானாக. தவறு கண்டவிடத்தில் சுட்டிக் காட்டி திருத்துமாறு வேண்டுகிறேன்.

பாடல் : 001
அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.

*****
எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்... அந்த பேரின்பைதை தந்திடுவாய்.

பாடல் : 002
ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.
குணங்குடி மஸ்தான் சாகிபு

*****
ஆதியானவனே... ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே..
அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்க்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே

பாடல் : 003

வேத மறைப்பொருளை வேதாந்தத் துஉட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே
*****
வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள்
யாருள்ளார் பராபரமே

பாடல் : 004
அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே
*****
அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும்
மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே

பாடல் : 005
நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

****

நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே,
நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே